Foundation

1920 இல் ஸ்ரீமான் சி.பி.ராமசாமி ஐயரும், 1967 இல் கே. எம். சுப்ரமணிய ஐயரும் பிராமண சங்கம் துவங்க பல பிரயத்தனங்கள் செய்திருந்தனர். அதன் நீட்சியாக ஆறு கிளைச் சங்கங்களாக இருந்த பிராமண சமூகம் இணைக்கப் பட்டு அறுபது நபர்களுடன், அமரர். ஸ்ரீமான் C.G.V மற்றும் ஸ்ரீமான் சின்னை வெங்கட்ராமன், அமரர் ஸ்ரீமான். காசிராமன் ஆகியோரால் “பிராமணர் ஒற்றுமை” என்பதை அடிப்படை இலட்சியமாகக் கொண்டு 16-11-1980 அன்று கோவையில் “தாம்ப்ராஸ்” (தமிழ்நாடு பிராமணர் சங்கம்) தொடங்கப் பட்டது. ஆடிட்டராகவும், சேவை மனம் கொண்ட செல்வந்தராகவும் திகழ்ந்து C.G.V என்று அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் கோவை ஸ்ரீமான். C.G.வெங்கட்ரமணன் அவர்கள் பழனியில் நடந்த கூட்டத்தில் தாம்ப்ராஸ்-ன் முதல் தலைவராக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

பிராமண வெறுப்பு பரவி இருந்த அன்றைய காலகட்டத்தில், தமிழகமெங்கம் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தனது புரட்சிக் கருத்துகளையும், சித்தாந்தங்களையும் பிராமணர்களுக்கு ஆதரவாக தர்க்க ரீதியாக பேசி பிராமண எழுச்சி ஏற்படுத்திய, சின்னமனூர் என்ற சிற்றூரில் பிறந்த “சின்னை” வெங்கட்ராமன் அவர்கள் தனது தீப்பொறி தெறிக்கும் வசீகர பாரதி பேச்சால், தாம்ப்ராஸ்-ன் முதல் பொதுச் செயலாளராக அறிவிக்கப் பட்டார்.

பழனி மாவட்டத் தலைவராக இருந்த மரக்கடை வெங்கடாச்சலம் என அன்புடன் அழைக்கப்பட்ட அமரர். வெங்கடாச்சலம் அவர்கள் சங்கத்தின் முதல் பொருளாளராக அறிவிக்கப் பட்டார்.

Click here Download Android App